Login
  • Username:

    Password:
  • Remember my login on this computer
  • Register
Categories
  • 1 (11)
Users online
  • Users: 1 Guest
  • Most Users Ever Online Is On June 3, 2019 @ 9:13 pm

வணக்கம்

February 28th, 2011 Announcement

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

கதிரவன் கதிர் 7 வெளியீட்டுவிழா - 2011

April 6th, 2011

கதிரவன் கலைக் கழகம் வெளியிடும் கதிரவன் கல்வி இலக்கியக் கலைச் சஞ்சிகை கதிர் 7 வெளியீட்டுவிழா 03.04.2011 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகாவித்தியாலயத்தில் திரு.த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி,புனர்வாழ்வு.மீள்குடியேற்றம் கிராமிய அபிவிருத்தி,சுற்றுலா மற்றும் சுற்றாடல் துறைச் செயலாளர் கலாநிதி.சி.அமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்.திரு மா .செல்வராசா,மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் திரு இரா.நாகலிங்கம் (அன்புமணி),முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் திரு.செ.எதிர்மன்னசிங்கம், செங்கதிர் ஆசிரியர் திரு.த.கோபாலகிருஸ்ணன்(செங்கதிரோன்), மட்டக்களப்பு வர்தக கைத்தொழில், விவசாயச் சம்மேளனத் தலைவர் திரு.வி.றஞ்சிதமூர்த்தி, எழு

த்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் திரு.ஓ.கே.குணநாதன், கலாபூஷணம் ஆ.மு.சி.வேலழகன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் திரு.செ.தபராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்
கெளரவ அதிதிகளாக கவிஞர் நிலாதமிழின் தாசன், மண்ரூர் அசோகா, கவிஞர் தேனூரான், திருமதி.சுந்தரமதி வேதநாயகம்,
ஆரையூர்த்தாமரை , மண்முனைப்பற்று கலாசார உத்தியோகத்தர் திரு.செ.சோமசுந்தரம்,மண்முனைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி. திருமதி.பிரசாந்தி பிரியதர்ஷன், கிராம அதிகாரிகளான திரு.த.த.தயாபரம்,திரு.செ.டிரக்ஷ்ன் ,திருமதி.தயனி கிருஷ்ணாகரன் இவர்களுடன் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.மா.சதாவிவம், மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு.வே.தட்சணாமூர்த்தி மற்றும் சமாதான நீதிவான் திரு.பொன்னையா. சின்னத்தம்பி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மரபுரீதியான ஆரம்ப நிழ்வுகளான வரவேற்பு மங்கலவிளக்கேற்றல் இறைவணக்கம், தமிழ் மொழிவாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து திரு.சி.புவனேந்திரன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரு.த.அன்பராசா அவர்களால் தலைமையுரையும் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது முதல் பிரதியினை திரு.சி.அமலநாதன் அவர்கள் திரு.மா.செல்வராசா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கவிஞன் சிற்றிதழ் ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கதிரவன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் திரு.தயாபரம் அவர்களுக்கான கெளரவிப்ப நிகழ்வும் சிறப்புரைகள் மற்றும் பிரதம அதிதிகள் உரையும் அதனைத் தொடர்ந்து கவிஞன் ஆசிரியர் திரு.ச.மதன் அவர்களிக் நன்றியுரையுடனும் விழா இனிதே நிறைவு பெற்றது

படங்களுக்கு
<நிகழ்வுகள் காண இங்கே க்ளிக் செய்யவும் >

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று புதுக்குடியிருப்பில்

February 27th, 2011

தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் புதுக்குடியிருப்பில் இயங்கி வருகிறது. இதன் ஏற்பாட்டில் இன்று அதாவது 27.02.2011 மட் - புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்
 மாலை அணிவித்து அதிதிகளை வரவேற்றல்
 மங்கல விளக்கேற்றல்
 மௌன இறைவணக்கம்
 வரவேற்புரை
திரு.மா.சதாசிவம் ஜே.பி (ஆலோசகர்இதே.பா.ச. கி.மா)
 தலைமையுரை
திரு.று.ஆ.டீ. ரட்ணசேகர (தே.பா.ச. சிரேஸ்ட தலைவர்)
 சிற்ருரை
திரு.மா.வடிவேல் (தே.பா.ச. கிழக்கு மாகாணத் தலைவர்)
 இணைச் செயலாளர்கள் உரை
தலைமையகம்இ திரு.து.னு.கமல சிறி நாணயக்காரஇதிரு.சு.யூ.சுனில்
 அதிதிகள் உரை
 தேநீர் இடைவேளை
 விரிவுரை -‘சமூக சேவையூம் பார்வையற்றௌரும்.”
திரு.ஜெயராஜ்இ அதிபர்,ஐயங்கேணி ம.வி.
 நன்றியூரை
திரு.ஆ.பரமேஸ்வரன் (இணைச் செயலாளர்,தே.பா.ச. கிழக்கு மாகாணம்)
 மதியபோசனம்
 நிருபாக சபைக் கூட்டங்கள்
 கூட்ட நிறைவு

நிகழ்வுகளின் நிழழ்கள்

சம்மேளனத்தின் கிழக்கு மாகாண ப் பொருளாளர் திரு.இருதயராஜன்  மட்-மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.கெளரவ.சீ.யோகேஸ்வரன் அவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்கம் காட்சி

சம்மேளனத்தின் அங்கத்தவர் ஒருவர்  மட்-மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.கெளரவ.பி.அரியேந்திரன் அவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்கம் காட்சி

மட்-மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.கெளரவ.பொன்.செல்வராசா அவர்கள் மங்கலவிளக்கேற்றும் காட்சி.

தேசிய பார்வையற்ரோர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் திரு.வடிவேல் அவர்கள் மங்கல விழக்கேற்றும் காட்சி

 வரவேற்புரை

திரு.மா.சதாசிவம் ஜே.பி (ஆலோசகர்,தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் . கி.மா)

நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்

தலைமையுரை

தலைமையுரையில்  திரு.W.M.B. ரட்ணசேகர (தே.பா.ச. சிரேஸ்ட தலைவர்) தமதுரையில் சங்கத்தின் நோக்கங்களையும் திட்டங்களையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 சிற்ருரை

 

திரு.மா.வடிவேல் (தே.பா.ச. கிழக்கு மாகாணத் தலைவர்)

அதிதிகள் உரை


பாராளுமன்ற உறுப்பினர் .சீ.யோகேஸ்வரன் அவர்கள் தனதுரையில் 2011 தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  ரூபா. 100 000 .00 இச்சங்கத்திற்கதக ஒதுக்கவுள்ளதாக உறுதியளித்தார் மற்றும் சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதாக வும் கூறியிருந்தார்

பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியேந்திரன்அவர்களும்  தனதுரையில் 2011 தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  ரூபா. 100 000 .00 இச்சங்கத்திற்கதக ஒதுக்கவுள்ளதாக உறுதியளித்தார். மற்றும் தனதுரையில் எல்லா மனிதர்களுக்கும் 100ம வீதமாக எல்லா உணர்வுகளும் இருப்பதில்லை அந்த வகையில் இவர்களுக்கு பார்வை உணர்வு மட்டுமே இல்லை இவர்களும் மற்றவர்கள் போல் சமூகத்தில் வாழக்கூடியவர்கள். என்பதை வலியுறித்தினார்

பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாஅவர்கள்  தனதுரையில் இச்சங்கத்திற்கான நீர்வசதிகளைச் செய்து முடிப்பதென உறுதிமொழி வழங்கியதுடன்.”தங்கத்தினில் ஒரு குறையிருந்தாலும் தரத்தில் அது குறையாதது போல் இவர்களின் அங்கத்தில் இருக்கும் குறையினால் இவர்களின் ஆற்றலோ பண்போ குறைவாக இல்லாமல் நிறைவாக வே இருக்கின்றதென “கூறி நெஞ்சைத் தொட்டுச் சென்றார்

கலந்து கொண்டோரில் இன்னுமொரு பகுதியினர்

மதியபோசனம்

நன்றியுரை

திரு.ஆ.பரமேஸ்வரன் (இணைச் செயலாளர்,தே.பா.ச. கிழக்கு மாகாணம்)

-நன்றி-

இப்படிக்கு

மதன்

(உங்கள் கருத்துக்களை இடுகையிடுவதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்திச் செல்லுங்கள் )

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

இல்ல விளையாட்டுப்போட்டி இறுதிநாள்

February 26th, 2011


 

ட் - புதுக்குடியிருப்புக்

 கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஏலவே தீர்மானிக்கப்பட்டபடி 26.02.2011 அதாவது இன்று மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இவ்விளையாட்டுப் போட்டிக்கான நிதியுதவிகள் முற்றுமுழுதாக கிராமமக்களின் பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

               

 

இன்று பிற்பகல் 01.00 மணியளவில் மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வித்தியாலய அதிபர் திரு.வே.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.

 

 

       அதிபர் தமதுரையில் மட்டக்களப்புக் கல்வி வலயத்தில் முதலாவதாக இல்லவிளையாட்டுப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது எமது பாடசாலையில் என்பதை வலியுறுத்தியிருந்தார். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.பவளகாந்தன் அவர்கள் அழைக்கப்பட்டும் இந்நிகழ்வுக்கு அவர் வருகை தராதது வருத்தத்திற்குரியதே! எனினும் அவரின் பிரதிநிதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தெய்வேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இல்ல வடிவமைப்பை நோக்கும் போது கலைமகள் இல்லத்தினர் தமது இல்லத்தை கப்பல்போன்று மிகவும் அழகாக வடிவமைத்திருந்தனர். இதுவே இல்ல வடிவமைப்புக்கான முதலாம் பரிசினையும் தட்டிச்சென்றது.

திருமகள் இல்லத்தினர் தமது இல்லத்தின் ஒழுங்கமைப்பை பேரூந்து(பஸ்) அமைப்பிலும் கலைமகள் இல்லத்தினர் தமது இல்லத்தினை கார் வடிவிலும் வடிவமைத்திருந்தனர். அவை முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைத் தட்டிச்சென்றன.

 

     நிகழ்ச்சி நிரலின் படி மங்கலவிளக்கேற்றலுடனும் இறைவணக்கமுடனும் ஆரம்பமான நிகழ்வுகள் வரிசையில் அடுத்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியும் இல்லங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன.
இதன் பின் ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் நிகழ்வு இடம்பெற்றது. இதனையடுத்து அணிநடை இடம்பெற்றது இதில் கலைமகள், திருமகள், மலைமகள் இல்லங்கள் முறையே 1ம்,2ம், 3ம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

 

 

          

நிகழ்வுகள் நிழல்களாக
————————————-

3 இல்லங்களைச் சேர்ந்த விளையாட்டுத்தலைவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி அதற்கு  மரியாதை செலுத்தும் காட்சி

     

 

 மூன்று இல்லங்களின் கொடியுடன் தேசியக்கொடி மற்றும் பாடசாலைக்கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கும் காட்சி

 

 

 கலைமகள் இல்லத்தினரின் அணிநடைக் காட்சி (முதலாமிடம்)

 

 

 

 திருமகள் இல்லத்தினரின் அணிநடைக் காட்சி (இரண்டாமிடம்)

 

 

 

 

மலை மகள் இல்லத்தினரின் அணிநடைக் காட்சி (மூன்றாமிடம்)

 

 

 

 

 அதிபர் அணிநடையினை ஏற்கும் காட்சி

 

 

 உடற்பயிற்சிக் கண்காட்சி

 

 

 

 

பார்வையாளர்கள் (பழைய மாணவர்கள்)

 

 

 

 

 மிட்டாய் ஓட்டம்

போத்தலில் நீர் நிரப்புதல்

தாரா நடை

உத்தியோகஸ்தர்களுக்கான தொப்பி மாற்றுதல்

பழைய மாணவிகளுக்கான பந்து மாற்றுதல்

பெற்றோருக்கான பலூன் ஊதி உடைத்தல்

 அதிதிகள் உரை

திரு .மா. சதாசிவம் (தலைவர், ஆலய பரிபாலன சபை)

உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தெய்வேந்திரன் அவர்கள்(உங்கள் கருத்துக்களை இடுகையிடுவதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்திச் செல்லுங்கள் )

நன்றி

மீண்டும் சந்திக்கும் வரை

என்றென்றும் அன்புடன்

மதன்

 (படப்பிடிப்பு உதவி . சி.சுதேஸ்வரன்)

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 26-02-2011

February 14th, 2011

மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 26-02-2011 அன்று நடத்துவததாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வித்தியாலய பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்தவண்ணமுள்ளன.  இதே வேளை இல்லங்களுக்கான போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ் விபரங்கள் அவ்வப்போது உங்களுக்காகத் தரவேற்றப் படும் எனும் மகிழ்ச்சியான செய்தியைக் கூறிக்கொள்வதுடன். இறுதிநாள் நிகழ்வுகளும் புகைப்படங்களுடன்
நீங்கள் கண்டுகளிக்கலாம்.

14-02-2011 இன்று ஆண் பெண் இருபாலாருக்குமான 08 ஓவர்கள் கொண்ட மென்பந்துக் கிரிக்கட் சுற்றுபபோட்டி நடைபெற்றது. அதன் முடிவுகள்

ஆண்களுக்கான போட்டி

முதலாமிடம் : கலைமகள்
இரண்டாமிடம் : திருமகள்
மூன்றாமிடம் : மலைமகள்

பெண்களுக்கான போட்டி

முதலாமிடம் : திருமகள்
இரண்டாமிடம் : மலைமகள்
மூன்றாமிடம் : கலைமகள்

இல்லங்களின் விபரங்கள்:

திருமகள் இல்லம்

இல்லத் தலைவர்கள் : செல்வி.கே.பிரியந்தினி
செல்வன்.வ.கிரிசாந்த்

விளையாட்டுத் தலைவர்கள் : செல்வன் . அ.வாசகன்
செல்வி. நி. தர்சிகா

14.02.2011 வரை பெற்ற புள்ளிகள் : 120

கலைமகள் இல்லம்

இல்லத் தலைவர்கள் : செல்வன்.சி.திவாகரன்
செல்வி.டே.சரோஜினி

விளையாட்டுத் தலைவர்கள் : செல்வன் . வா.ஜெயக்குமார்
செல்வி. ந. நவநீதரதி

14.02.2011 வரை பெற்ற புள்ளிகள் : 145

மலைமகள் இல்லம்

இல்லத் தலைவர்கள் : செல்வன்.பு.லிகிர்தன்
செல்வி.ப.ஹேமசாந்தி

விளையாட்டுத் தலைவர்கள் : செல்வன் .கி.ஜிஜானந்த்
செல்வி. இ.சங்கீதா

14.02.2011 வரை பெற்ற புள்ளிகள் : 155

தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள்

மீண்டும் சந்திக்கும் வரை

என்றென்றும் அன்புடன்

M.S. மதன்

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

மாபெரும் கலைவிழா - 2010

February 12th, 2011


31.10.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட புதுக்குடியிருப்புக் கலை இலக்கிய வட்டம்,தனது 2வது கரலநிகழ்வான” மாபெரும் கலைவிழா” ஒன்றினை திரு.த.இன்பராசா தலைமையில் 25.12.2010 அன்று மட்- புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தது. இதில் பிரதம அதிதியாக சிறி விக்கினேஸ்வரர் ஆலய பரிபாலனசபைத்தலைவர் திரு.மா.சதாசிவம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஆலய பரிபாலனசபை நிருவாக உறுப்பினர்களுடன் வித்தியாலய அதிபர் திரு வே.தட்சணாமூர்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் நடனம், பாடல்,நாடகம், விவாத அரங்கு, போன்றன அரங்கேறின. ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்நிகழ்வின் இறுவட்டுக்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

February 11th, 2011

வணக்கம்!

இவ் இணையத்தளத்திற்கு வருகைதந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் இதை எமது உறவுகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.இதில் புதுக்குடியிருப்பின் நிகழ்வுகள் அவ்வப்போது உங்களுக்குத் தரவேற்றப்படும்

இப்படிக்கு

உங்கள் அன்பின்

மதன்

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

2009 இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்திபெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

September 20th, 2010


கடந்த வருடம் 2009 இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக் கழகத்திற்கு பின்வரும் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

1.      செல்வி.சு.அமலரூபி (கிழக்குப் பல்கலைக்கழகம்,)

2.    செல்வி.கோ.இந்திரகுமாரி (கிழக்குப் பல்கலைக்கழகம்)

3.    செல்வி.சி.டிலோசனா (வட கிழக்கு ப் பல்கலைக்கழகம்)

 

இவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

மாகாணமட்ட பாடலாக்கப்போட்டியில் செல்வன் த.யுவராசா முதலிடம்

September 20th, 2010

மட்- புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய மாணவன் செல்வன் த.யுவராசா தேசிய கலை இலக்கிய விழா 2009 இல மாகாண மட்டப் பாடலாக்கப்போட்டியில் முதலாமிடம் பெற்று தற்போது அவரது பாடல் தேசிய மட்டத்தில் தெரிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது
தேசிய ரீதியில் அவரது பாடல் சவற்றிபெற வாழ்த்துகிறோம்

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

புதுக்குடியிருப்பு கிராமத்தின் வரலாற்றுப் பின்னணி

September 10th, 2010

                  மட்டக்ககளப்பு மாவட்டத்தில் மன்முனைப்பற்று பிரதேசத்தில் அமைந்த தெய்வாதினம் பொருந்திய ஓர் கிராமமே புதுக்குடியிருப்பு கிராமமாகும். இக்கிராமத்தின் பின்னணியை நோக்கும் போது மட்டக்களப்பானது கி.பி 300ஆம் நூற்றாண்டலவில் முதல் குடிகளின் வழித் தோன்றலாகிய குணசிங்கன் என்பவரால் ஆழப்பட்டது அவனது ஆட்சியின் போது குகசேசனுடைய புத்திரி உழகநாச்சியார் என்பவல் இங்கு வந்த குளகோத்திரங்கள் எல்லாம் அறிந்து சந்ததி உரிமை கொண்டாடி காடு செரிந்த குடிவாழ்வில்லாத பிரதேசம் ஒன்றை வழங்கும் படி குணசிங்கனை வேண்டினாள். அவனும் மிக மகிழ்ந்து மட்டக்களப்புக்கு பாகமக உள்ள காடடர்ந்த பிரதேசத்தை நிந்தமாக கொடுத்தான் அதனை உலக நாச்சி தனது தம்பியை கொண்டு வெட்டி திருத்தி முக்குவர் குலக் குடும்பங்களை குடியமர்த்தி மண்முணை என பெயரிட்டு ஆண்டால்.
இக்கிராமத்திற்கு புதுக்கடியிருப்பென பெயர் வந்ததிற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றது அந்தவகையில் மக்கள் புதிதாக வந்து குடியேறி வாழ்ந்தமையால் புதுக்குடியிருப்பு என அமைந்தது என பலர் கூறுகின்ரனர். மேலும் சிலர் ஏனைய மற்ற கிராமங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன் இக்கிராமம் தோன்றியதனால் புதுக்குடியிருப்பு என அழைக்கப்படுகின்றது. மற்றும் இக்கிராமத்தில் முக்குவர் குளம் தோன்றி குடியேறுவதற்கு முன் வேறு மக்கள் வாழ்ந்ததாக சரித்திரம் எதுவும் இல்லாததால் புதுக்குடியிருப்பு என அழைக்கப்பட்டது என பல காரணங்கள் கூறப்படுகின்றது
புதுக்குடியிருப்பு கிராமமானது தாழங்குடாவிற்கும் கிரான்குளத்திற்கும் இடைப்படடதோர் இயற்கை வளமும்இ கல்வி வளமும் மிகுந்த அழகிய கிராமமாகும் இக்கிராமத்திற்கு உரித்தான ஓர் சிரப்பான விடயம் தொழிலாகும்
இங்கு தமிழ் மக்களே தனித்துவமாக வாழ்வதோடு இந்து மக்களே அதிகமாக வாழ்கின்ரனர் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இக்கிராமத்தில் மற்றுமோர் சிறப்பான விடயமாக சிறு தெய்வங்களில் ஒன்ராகிய பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு உரிய கண்ணகி அம்மன் ஆலயமும் கண்ணகியின் அருளால் மணிதனை பூரணப்படுத்துவதற்கு என அதன் அருகே நூலகமும் ஓங்கி உயர்ந்த கட்டிடத்தில் சிறுவர்களுக்கு அறிவினை புகட்டும்படி அவர்களின் எதிர்காலத்தை நிர்னயிக்கும் கல்வி புகட்டும் கண்ணகி மகா வித்தியாலயமும் அதன் நேரே வேண்டும் வரமளிக்கும் பிள்ளையார் ஆலயமும் அமையப் பெற்றதாகும்.

 

இக்கிராமம் ஆரம்பத்தில் குறைவான சனத்தொகையை கொண்டிருந்தது பின் சனத்தொகை அதிகரிப்பினால் வடக்கே புதுக்கடியிருப்பு வடக்கு கிராமத்தினையும் தெற்கே புதுக்கடியிருப்பு தெற்கு கிராமமாகவும் பிரிக்கப்பட்டது பின் சனத்தொகை செறிவினால் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மத்திக் கிராமமாகவும் பிரிக்கப்பட்டது.

Print This Post Print This Post
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (4 votes, average: 3 out of 5)
Loading ... Loading ...